Followers

இந்திய வரலாற்றின் முக்கிய தினங்கள் 1971-2004

on Monday, April 25, 2011


1971        இமாச்சலபிரதேசம் மாநிலமாக ஆனது. இந்தோ-பாக் போர் ஆரம்பமானது, பங்காளதேஷ் பிறந்தது.

1972       சிம்லா ஒப்பந்தம். சி. இராஜகோபாலச்சாரி இறந்தார்.
1973 மைசூர் மாநிலம் கர்நாடகா மாநிலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1974       இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. ஐந்தாவது குடியரசுதலைவராக பக்ருதீன் அலி அகமது தேர்ந்தெடுக்கப்பட்டார்.சிக்கிம் இந்தியாவின் மாநிலமாக இணைக்கப்பட்டது.

1975       இந்தியாஆரியப்பட்டாஎன்ற செயற்கைகோளை ஏவியது. சிக்கிம் இந்தியாவின் 22 வது மாநிலமாக ஆனது. அவசரநிலை பிரகடனம் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டது.

1976       இந்தியாவும் சீனாவும் ராஜ்ஜிய உறவை ஏற்படுத்திக்கொண்டன.

1977      ஆறாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஜனதா கட்சி மக்களவையில் பெருன்பான்மை பெற்றது. இந்தியாவின் ஆறாவது குடியரசுதலைவராக நீலம் சஞ்சீவி ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1979 பிரதம மந்திரி பதவியை மொரஜி தேசாய் இராஜினாமா செய்தார். சரண்சிங் பிரதம மந்திரி ஆனார். ஆகஸ்டு 20 ஆம் நாள் சரண்சிங் பிரதம மந்திரி பதவியை இராஜினாமா செய்தார். ஆறாவது மக்களவை கலைக்கப்பட்டது.

1980        ஏழாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது திருமதி. இந்திராகாந்தி பிரதம மந்திரியாக பதவி ஏற்றார். சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்தார்; இந்தியா ரோகினி செயற்கைகோள் எஸ்.எல்.வி-3 விண்கலம் மூலம் விண்ணில் செலுத்தியது.

1982      ஆசியாவில் மார்ச் 2 ஆம் நாள் மிக நீளமான பாலம் திறக்கப்பட்டது. ஆச்சார்ய ஜே.பி கிருபாலனி மார்ச் 19 ஆம் நாள் இறந்தார். இன்சாட் 1 விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் குடியரசுதலைவராக கியானி ஜெயில் சிங் ஜுலை 15 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவம்பர் 5 ஆம் நாள் குஜராத்தை தாக்கிய புயலால் 500 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நவம்பர் 15 ஆம் நாள் ஆச்சார்யா வினோபாவோ இறந்தார்.9 வது ஆசியா விளையாட்டுப் போட்டி நவம்பர் 19 ஆம் நாள் தொடங்கப்பட்டது

1983       காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது.

1984       பஞ்சாப்பில் ப்ளு ஸ்டார் தாக்குதல் நடத்தப்பட்டது. ராகேஷ் ஷர்மா விண்வெளிக்கு சென்றார்.இந்திராகாந்தி கொல்லப்பட்டார். ராஜீவ்காந்தி பிரதம மந்திரி ஆனார்.

for continue this page click above link.


1985       ராஜீவ்லோங்காவால் ஒப்பந்தம் கையொப்பமானது. பஞ்சாப் பொதுத்தேர்தலில் சாண்ட். ஹச்.எஸ். லோங்காவால் கொல்லப்பட்டார். அஸ்ஸாம் ஒப்பந்தம்.7- வது ஐந்தாண்டு திட்டம் துவங்கப்பட்டது.
1986      மிசோரம் ஒப்பந்தம்.

1987      ஆர். வெங்கட்ராமன் குடியரசுதலைவரானார்.இந்தியாவின் துணை குடியரசுதலைவராக சங்கர் தயால் ஷர்மா தேர்வுசெய்யப்பட்டார். போபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்சனை.

1989      ராமசேனா பண்டிகை அயோத்தியில் கொண்டாடப்பட்டது; இந்தியாவின் முதல் .ஆர்.பி.எம். ’அக்னிஏவுகனை ஒரிசாவிலிருந்து மே 22 ம் நாள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. திரிசூல் ஏவுகனை ஜுன் 5 ம் நாள் சோதனை செய்யப்பட்டது. செப்டம்பர் 27 ம் நாள் இரண்டாவது ஏவுகனைபிருத்தீவ்வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராஜீவ்காந்தி தேர்தலில் தோல்வியுற்று, நவம்பர் 29 ம் நாள் பதவியை ராஜினாமா செய்தார். ஜவஹர் ரோஜ்கார் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது.தேசிய முன்னணி தலைவர் வி.பி. சிங் 7- வது பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.டிசம்பர் 2 ம் நாள் புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டது.9 வது மக்களவை உருவாக்கப்பட்டது.

1990       இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து மார்ச் 25 ம் நாள் நாடு திரும்பியது. பிப்ரவரி 14 ம் நாள் இந்தியன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 320 ரக விமானம் விபத்துக்குள்ளானது.ஜனதா தளம் பிளவுபட்டது. பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டது. அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டதால் கைது செய்யப்பட்டார். மண்டல் கமிஷன் அறிக்கையை வி.பி. சிங் அமுல்படுத்துவதாக அறிவித்தார், --------அயோத்தியில் ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி பிரச்சினையால் கலவரம் உருவானது.

1991       ஜனவரி 17 ம் நாள் வளைகுடா போர் தொடங்கியது. ராஜீவ்காந்தி மே 21 ம் நாள் கொல்லப்பட்டார்.ஜுன் 20 ம் நாள் 10 வது மக்களவை ஏற்படுத்தப்பட்டது.பி.வி. நரசிம்மராவ் பிரதம மந்திரி ஆனார்.

1992       ஜனவரி 29 ம் நாள் இந்தியாவும் இஸ்ரேலும் முழு நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டது. ஏப்ரல் 23 ம் நாள் பாரத ரத்னா விருது மற்றும் ஆஸ்கார் விருது பெற்ற சத்தியஜித்ரே இறந்தார். ஜீலை 25 ம் நாள் சங்கர் தயால் சர்மா குடியரசுதலைவராக தேர்வுசெய்யப்பட்டார். முதல் முதலாக .என்.எஸ். ”சக்திஎன்ற நீர்முழ்கி கப்பல் கட்டப்பட்டு பிப்ரவரி 7 ம் நாள் பயன்படுத்தப்பட்டது.

1993       ஜனவரி 7 ம் நாள் அயோத்தியில் 67.33 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ஆனை பிறப்பிக்கப்பட்டது. பாரதிய ஜனதா பேரணிக்கு அதிகபட்சமான பாதுகாப்பு வழங்கப்பட்டது. மும்பை வெடிகுண்டு தாக்குதலில் 300 பேர் உயிரிழந்தனர். இன்சார்ட் 2 பி முழு பயன்பாட்டிற்கு வந்தது. மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்.

1994       விமான போக்குவரத்து தனியாருக்கு அனுமதிக்கப்பட்ட்து. காட் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. பிளேக் நோய் தாக்குதல்.பிரபஞ்ச அழகியாக சுஷ்மிதாசென்னும், உலக அழகியாக ஐஸ்வர்யாராயும் தேர்வு செய்யப்பட்டனர்.

1995       முதல் தலித் முதலமைச்சராக மாயாவதி உத்திரபிரதேச மாநிலத்தில் பொறுப்பேற்றார். மகாராஷ்ரா மற்றும் குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியும், ஜனதா தளம் கர்நாடகத்திலும், காங்கிரஸ் ஒரிஸாவிலும் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் () உருவாக்கப்பட்டது. மாயாவதி அரசு கவிழ்ந்ததற்கு பின் உத்திரபிரதேச மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமுலுக்கு வந்தது.இன்சாட் 2சி மற்றும் .ஆர்.எஸ். - சி ஏவப்பட்டது.

1996       பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் மீதுஹவாலாவழக்கு தொடரப்பட்டது. மார்ச் 21 ம் நாள் பி.எஸ்.எல்.வி டி3 .ஆர்.எஸ்.பி-3 விண்ணில் செலுத்தப்பட்டது, இந்நிகழ்வு இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சகாப்தமாகும். ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 11 வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 127 பிரதிநிதிகளுடன் தனிப்பெரும்பான்மை பெற்றது.

1997        ஆகஸ்டு 15 ம் நாள் இந்தியா 50 வது சுதந்திர தின விழாவை கொண்டாடியது.

1998       அன்னை தெரசா இறந்தார். அடல் பிகாரி வாஜ்பேயி இந்திய பிரதம மந்திரியாக ஆனார். பொக்ரானில் இந்தியா இரண்டாவது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. (பொக்ரான் II)

1999        டிசம்பர் 24 ம் நாள் இந்திய விமானம் .சி-814 தீவிரவாதிகளால் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகாருக்கு கடத்தப்பட்டது. இந்திய அரசு பிணையாளிகளை மீட்பதற்காக மூன்று போராளிகளை விடுவித்தது. பாகிஸ்தானால் ...சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி கே. நாச்சிகெடாவை எட்டு நாள்கள் காவலுக்கு பின் பாக்கிஸ்தான் விடிவித்தது.இந்திய இராணுவம் ஜம்மு & காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள கார்கில் பகுதியின் எல்லையை தாண்டி ஊடுருவிஆப்பரேஷன் விஜய்என்ற பெயரில் பாகிஸ்தான் ஊடுருவல் செய்தவர்கள் மீது, தாக்குதல்நடத்தியது போரில் வெற்றி பெற்றது.

2000        அமெரிக்கா அதிபர் பில் கிளிண்டன் மார்ச் மாதத்தில்இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டார். சட்டீஸ்கர், உத்திராஞ்சல் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியாவின் மக்கள் தொகை 1 பில்லியனை தாண்டியது.

2001           ஜீலை 2001 இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆக்ரா உச்சி மாநாடு நடைபெற்றது இந்தியாவில் மோசமான இயற்கை சீற்றம் ஏற்பட்டது குஜராத்தில் ஜனவரி 2001 ல் பூகம்பம் ஏற்பட்டது. மார்ச் மாதத்தில் டெஹெல்கா.காம் என்ற இணையதளம் வெளியிட்ட ஆயுதபேர காட்சிகள் இராணுவ அதிகாரிகள் ,மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை சிக்கலில் தள்ளியது.இந்தியாவின் 6 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் மாதத்தில் கணக்கெடுக்கப்பட்டது.(சுதந்திரம் பெற்றதிலிருந்து).ஆகஸ்டு மாதத்தில் என்ரன் நிறுவனம் இந்திய ஆற்றல் துறையிலிருந்து விலகியது. ஜி.எஸ்.எல்.வி. செயற்கை கோள் ஏப்ரல் மாதத்திலும் பி.எஸ்.எல்.விசி3 அக்டோபர் மாதத்திலும் ஏவப்பட்டது.

2002        71 வயதான ஏவுகனை விஞ்ஞானி அவுல் பகீர் ஜெயினுலப்தீன் அப்துல் கலாம், இந்தியாவின் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்திய காலத்தில் நடைபெற்ற கொடூரமான மதக்கலவரத்தில் ஒன்றானகோத்ரா இரயில் எரிப்பு சம்பவம்பிப்ரவரி 27 ம் நாள் குஜராத்தில் நடைபெற்றது. ஏப்ரல் மாதத்தில் தேசிய நீர்வளக் கொள்கையானது நீர் வள மேலாண்மை மற்றும் நிலைத்த பயன்பாட்டிற்கான நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது.

2003       அணுக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் முடிவெடுக்கும்/நிலைப்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஏர் மார்ஷல் தேஜா மோகன் அஷ்தானா, முதல் தலைமை…… தளபதியாக (SFC)அறிவிக்கப்பட்டார். மேம்படுத்தப்பட்ட பன்பயன்பாட்டு தொலைதொடர்பு செயற்கைகோள் இன்சாட் 3 பிரெஞ்சு குயானாவிலுள்ள கொருஉ விண்வெளித் தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஜுன் மாதத்தில், பொருளாதார குற்றங்களை ஒழிக்கும் நோக்கோடு மத்திய புலனாய்வுத் துறையின் பொருளாதார புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட்டது. இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட தொலைதொடர்பு செயற்கைகோளான இன்சாட் 3 பிரெஞ்சு குயானாவிலுள்ள கொருஉ விண்வெளித்தளத்திலிருந்து ஐரோப்பிய விண்கலத்தின் உதவியுடன் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

2004       பொதுத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வீழ்த்தியது. காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியாகாந்தி பிரதமராக வாய்ப்பு பலமாக இருந்தும், விரும்பாததால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மத்தியில் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் தலைமையின் கீழ் அரசு அமைத்தது.


0 comments:

Post a Comment