Followers

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சமீப சாதனைகள்

on Tuesday, April 26, 2011




தென்னாப்பிரிக்க ஓபன் டென்னிஸ்

தென்
ஆப்பிரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக் காவின் கெவின் ஆண்டர்சனும் இந்தியாவின் சோம்தேவும் மோதினார்கள். இதில் கெவின் ஆண்டர்சன் சோம்தேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த போட்டியின் முடிவில் இந்தியாவின் சோம்தேவ் தரவரிசையில் 30 இடங்கள் முன்னேற்றம் கண்டு 80-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில் அமெரிக்கா, கனடா இணையான ஜேம்ஸ் செரிடானியும் அடில் ஷாமாஸ்தீனும் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

ஆப்பிரிக்கா
கோப்பை கால்பந்து

வட
ஆப்பிரிக்கா நாடான மொராக்கோ 2015-ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்கா கோப்பை கால்பந்து போட்டியை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 2017-ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்கா கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை தென்னாப்பிரிக்கா பெற்றுள்ளது.

கொரியா
ஓபன் பேட்மிண்டன் 2011

கொரியாவில்
நடந்த கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சீனாவின் லின்டான் மலேசியாவை சேர்ந்த உலகின் நம்பர் ஒன் வீரரான லீ சாங்கை தோற்கடித்து 2011-ஆம் ஆண்டுக்கான கொரியா ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார். பெண்கள் பிரிவில் நடந்த இறுதி போட்டியில் சீனாவின் யீஹான் வாங் சக நாட்டவரான ஷீக்ஸ்யான் வாங்கை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மலேசிய
ஓபன் பேட்மிண்டன் 2011

மலேசியாவில்
நடந்த மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவில் லீ சாங் வேய் இந்தோனேசியாவின் தாபிக் ஹிதயத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். பெண்கள் பிரிவில் ஷீக்ஸ் யான் வாங் சகநாட்டவரான யீஹான் வாங்கை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

ஆசிய
கோப்பை கால்பந்து

கத்தாரில்
நடந்த 15-ஆவது ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான், ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இது ஜப்பானின் நான்காவது சாம்பியன் பட்டமாகும். இதற்கு முன்பு 1992, 2000 மற்றும் 2004 ஆகிய ஆண்டு களில் ஜப்பான் கோப்பையை வென்றிருந்தது.

பிரேசில்
கால்பந்து வீரர் ரொனால்டோ ஓய்வு

பிரேசில்
அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ கால்பந்து போட்டியில் இருந்து தாம் ஒய்வு பெறுவதாக தெரிவித் துள்ளார். 34 வயதாகும் ரொனால்டோ 3 முறை  சிறந்த வீரர் விருதையும், 2 முறை உலக கோப்பையை பிரேசில் அணி கைப்பற்ற முக்கிய காரணமாகவும் திகழ்ந்தார். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் 15 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். மேலும் கிளப் அணிகளுக்காக தான் விளையாடிய 446 போட்டிகளில் 326 கோல்களை அடித் துள்ளார்இவர் 2009-இல் இருந்து பிரேசிலின் காரின்தியன்ஸ் கிளப் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக
கோப்பை கிரிக்கெட் போட்டியின் சமீப சாதனைகள்

இதுவரை
20 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. சச்சின், டிவில்லிலியர்ஸ், ரையான் ரென் டஸ்சாத்தே ஆகியோர் தலா 2 சதங்கள் அடித் துள்ளனர். சச்சின் மொத்தமாக ஆறு சதமடித் துள்ளார் . தனிநபர் அதிகபட்சம்: சேவாக் 175 ரன்கள் (வங்களாதேசத்துக்கு எதிராக);  அதிக விக்கெட்டுகள்: பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி (17 விக்கெட்டுகள், 6 லீக் ஆட்டங்கள்);    சிறந்த பந்து வீச்சு: மேற்கிந்திய வீரர் கெமர் ரோச் 6/27(நெதர்லாந்துக்கு எதிராக);  ஹாட்ரிக் சாதனை: மேற்கிந்திய வீரர் கெமர் ரோச் (நெதர்லாந்துக்கு எதிராக).

0 comments:

Post a Comment