Followers

வேற்றுமைகள் - விளக்கம்

on Monday, May 9, 2011


வேற்றுமை

          பெயர்ச் சொல்லொன்று வேறுபட்ட பொருளைத் தருவது வேற்றுமையாம். "மாறன் வெட்டினான்",இந்தத் தொடரில் வெட்டியவன் மாறன். "மாறனை வெட்டினான்", இந்தத் தொடரில் வெட்டுண்டவன் மாறன். இப்பொருள் வேறுபாட்டைத் தருவது "" என்னுஞ் சொல். இஃதெ வேற்றுமை என்றழைக்கப்படும். இந்த வேற்றுமையென்பது எட்டு வகைப் படும்:-
  1. முதல் வேற்றுமை()எழுவாய் வேற்றுமை:
          "சொற்றொடரில் ஒரு பெயர்ச்சொல் பெயராக மட்டுமல்லாது மற்றொரு வினைக்கு எழுவாயாகவும் இருக்கும் போது, அஃதெ எழுவாய் வேற்றுமை அல்லது முதல் வேற்றுமை எனப்படும். கீழ்வரும் உதாரணங்களில், முதலாவதாக மாறன் என்ற பெயர்ச்சொல் வெட்டினான் என்ற வினைக்கு எழுவாயாகவும் இருப்பதால் முதல் வேற்றுமை() எழுவாய் வேற்றுமையென்று வழங்கப்படும். இவ்வேற்றுமை வினைமுற்று, பெயர், வினாக்களில் ஒன்றைக் கொண்டு முடியும்: -

§  (-ம்)
மாறன் வெட்டினான்
வெள்ளி முளைத்தது

  1. இரண்டாம்வேற்றுமை:-
          ஒரு பெயர்ச்சொல்லின் பொருளை செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுவது இரண்ட்டாம் வேற்றுமை. இதன் உருபு "".: -

§  (-ம்)
நிலத்தை உழுதான்.(நிலம்++உழுதான்)
மரத்தை வெட்டினான்.(மரம்++வெட்டினான்)

  1. மூன்றாம் வேற்றுமை:-:-
          இவ்வேற்றுமைக்கான உருபுகள்: "ஆல்", "ஆன்", "ஒடு", "ஓடு". கீழ்வரும் சொற்றொடர்கள் உள்ளங்கை நெல்லிக்கனியென மூன்றாம் வேற்றுமையை விளக்குகின்றன: -

§  (-ம்)
கலப்பையால் உழுதான்
வாளான் அறுத்தான்
பாலொடு தேன்கலந்து
தாயோடு அறுசுவை போம்

  1. நான்காம் வேற்றுமை:-
          இவ்வேற்றுமைக்குரிய உருபு "கு". சொல்லுருபு "பொருட்டு". கீழ்வரும் உதாரணங்கள் இவ்வேற்றுமையை விளக்குகின்றன.

§  (-ம்)
ஏழைக்கு உணவு கொடுத்தான்
கூலியின் பொருட்டு பணி செய்தான்
  1. ஐந்தாம் வேற்றுமை:-
          இவ்வேற்றுமைக்கான உருபுகள்: "இல்", "இன்", சொல்லுருபு: "நின்று", "இருந்து", "காட்டிலும்", "பார்க்கிலும்", "விட". கீழ்வரும் எடுத்துக்காட்டுகளை கவனிக்கவும்:

§  (-ம்)
அறிவிற் சிறந்தவர் வள்ளுவர்
புதுவையின் தெற்குக் கடலூர்
மரத்தினின்று இறங்கினான்
பணியிலிருந்து ஒய்வு பெற்றார்
விந்தியத்தைக் காட்டிலும் இமயம் உயரம்
இரும்பை விட பொன் மதிப்புடையது

  1. ஆறாம் வேற்றுமை:-
          இவ்வேற்றுமையின் உருபு "அது". சொல்லுருபு: "உடைய". கீழ்வரும் எடுத்துகாட்டுகள் உருபின் பயனை விளக்குகின்றன:-

§  (-ம்)
முருகனது வேற் படை
என்னுடைய முகம்

  1. ஏழாம் வேற்றுமை:-
          இவ்வேற்றுமையின் உருபு: "கண்", "இடை", "முன்", "இடம்", "மேல்", "கீழ்", "பின்", "உள்", "இல்". இவை பயனாகும் சொற்றொடர்கள் இதோ:

§  (-ம்)
ஊரின் கண் உள்ளது குளம்
நல்லாரிடை அறிவு சிறக்கும்
என் முன் நில்லாதே
அவனிடம் பண்பு உண்டு
சிரமேற் கொள்க
வாழையின் கீழ் கன்று
கந்தனுக்குப் பின் முருகன்
தமிழ்க் கடலுக்குள் கவிமுத்து
ஊர் நடுவில் குளம்

  1. எட்டாம் வேற்றுமை:-
          இவ்வேற்றுமையை விளி வேற்றுமை என்பர். இதற்கு உருபு இல்லை. கீழ் வரும் எடுத்துக்காட்டுகளை கவனிக்க:

§  (-ம்)
மகன்    - மகனே!
ஈற்றில் "" மிகுந்தது.
நங்கை  - நங்காய்!
ஈற்றில் "" "ஆய்" ஆகத் திரிந்தது.
அன்பன் - அன்ப!
ஈறு கெட்டது
புலவர்  - புலவீர்!
ஈற்றயல் திரிந்தது
தம்பி    - தம்பி!
இயல்பாதல்

1 comments:

Unknown said...

Good Dedication!
I like it most..
Thnx.

Post a Comment