Followers

எட்டுத்தொகை நூல்கள்

on Sunday, May 15, 2011

எட்டுத்தொகை நூல்கள்:
  1. ஐங்குறுநூறு (500 பாடல்கள், 5 புலவர்கள்)
  2. குறுந்தொகை (401 பாடல்கள், 205 புலவர்கள்)
  3. நற்றிணை (400 பாடல்கள், 175 புலவர்கள்)
  4. அகநானூறு (400 பாடல்கள், பலர்)
  5. புறநானூறு (400 பாடல்கள், பலர்)
  6. கலித்தொகை (150 பாடல்கள், ஐவர்)
  7. பதிற்றுப்பத்து (80 பாடல்கள், 10 புலவர்கள்)
  8. பரிபாடல் (22 புலவர்கள்)
1. ஐங்குறுநூறு:

ஐங்குறுநூறு பாடல்கள் மொத்தம் 500, இவற்றுள் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன.

ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன. இவற்றைத் தொகுக்க உதவும் பாடலும், பிரிவுகளும்:

   "
மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
   
கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய
   
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
   
நூலையோ தைங்குறு நூறு"
  • மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார்
  • நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார் 
  • குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்
  • பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார் 
  • முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்

2.
குறுந்தொகை:

மொத்தமுள்ள 401 பாடல்களில் 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல் களைப் பாடியவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

எளிய சொல்லாட்சியும் குறைந்த அடிகளும் உடையது. இவை 4 முதல் 8 அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றதுஇப்பாடல்களை பூரிக்கோ என்பர் தொகுத்தளித்துள்ளார்.

சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள்நல்ல குறுந்தொகைஎன்று பாராட்டப்பட்ட நூல் குறுந்தொகை. . அகப்பொருளை இனிய காட்சிகளாக்கி விளக்கும் அழகிய இலக்கியம். தமிழரின் பண்பட்ட காதல் வாழ்வைப் பகரும் கவினுறு இலக்கியம்.
 
3. நற்றிணை:

நற்றிணை தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. மொத்தம் 400 பாடல்களைக் கொண்டுள்ளதால் இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். தொகுத்தளித்தவர் பெயர் கிடைக்கப் பெறவில்லை.
  • நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம்
  • இவை 9 முதல் 12 அடிகள் கொண்டு 192 (To be confirmed 175) புலவர்களால் பாடப்பெற்றவையாகும்.  
  • இவற்றில் 238 வது பாடல் 8 அடிகளுடனும், ஒரு சில பாடல்கள் ((64, 110, 221, 241, 372, 379, 393) 13 அடிகளுடன் உள்ளன.
  • இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை.
கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.


4.
அகநானூறு:

இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் 400 பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறதுஅகத் த்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.

இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்
  • இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன
  • இந்த 400 பாடல்கள் களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன.
  • ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை
  • இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை
  • இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை
  • இரட்டைபட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை
  • இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.
இத்தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார்.

   களிற்றியானைநிரை:
  • 1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.

    
மணிமிடை பவளம்:
  • 121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.

    
நித்திலக் கோவை:
  • 181 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.

5. புறநானூறு:

  • புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும்.
  • இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இவற்றுள் 10 பெண் புலவர்களும் அடங்குவர்.

போராசிரியர் ஜோர்ஜ் எல்.ஹார்ட் என்பவரால் புறநானூறு "The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru" எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

6. கலித்தொகை:

  • கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். 150 பாடல்கள் கொண்ட இத்தொகுப்பு நூல் பல்வேறு புலவர்களால் இயற்றப் பெற்றது
  • இவையனைத்தும் அகப்பொருள் பற்றிய பாடல்களாகும். இவை 12 முதல் 80 அடிகளைக் கொண்டது.

கலித்தொகையை முதலில் பதிப்பித்த (1887) சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களின் கருத்துப்படி இந்நூல் முழுமையும் இயற்றியவர்நல்லந்துவனார்.

கலித்தொகை இரு பாடல்களின் உதவியுடன் தொகுக்கப்பட்டுள்ளது.

     பாடல் 1

இன்ன திணையை இன்னார் பாடினார் என்பது:

    "
பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி,
   
மருதனிள நாகன் மருதம், - அருஞ்சோழன்
   
நல்லுருத்தி ரன்முல்லை, நல்லந் துவன்நெய்தல்
   
கலவிவலார் கண்ட கலி"
கலித்தொகை நூலில் உள்ள

  • பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவன் (பாலை பாடிய) பெருங்கடுங்கோ 
  • குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவன் கபிலன்
  • மருதத்திணைப் பாடல்களைப் பாடியவன் மருதன் இளநாகன்
  • முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவன் சோழன் நல்லுருத்திரன்
  • நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவன் நல்லந்துவன்

இந்தத் தொகைநூலில் திணைகள் வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பாடலே அடிப்படை.

     பாடல் 2


இன்னின்ன திணைக்கு உரிய பொருள் இன்னின என எளிமைப்படுத்தித் தெளிவாக்கும் பாடல்

    "
போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி
   
ஆக்கமளி ஊடல் அணிமருதம் - நோக்கொன்றி
   
இல்லிருத்தல் முல்லை இரங்கியபோக் கோநெய்தல்
   
புல்லும் கலிமுறைக் கோப்பு"

இதில் சொல்லப்பட்டவை: தலைவன், தலைவி
பிரிதல் போக்கு - பாலை
புணர்தல் - இனிமை தரும் குறிஞ்சி
இன்பத்துக்கு ஆக்கம் தரும் ஊடல் - அருமையான மருதம்
நோக்கம் ஒன்றுபட்டு தலைவி இல்லத்தில் ஆற்றியிருத்தல் - முல்லை
இரங்கிய போக்கு - நெய்தல்

7. பதிற்றுப்பத்து:

  • பதிற்றுப்பத்து(பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றியதாகும்
  • இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். சேர மன்னர்களின் கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம் ஆகிய பண்புகளையும் படை வன்மை, போர்த்திறம், குடியோம்பல் முறை ஆகிய ஆட்சித் திறன்களையும் விளக்குகின்றன
இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன
  • முதல் பத்து -
  • இரண்டாம் பத்து - பாடியவர் குமட்டூர்க் கண்ணனார், பாடப்பெற்றவர் - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
  • மூன்றாம் பத்து - பாடியவர் பாலைக் கௌதமனார், பாடப்பெற்றவர் - இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
  • நான்காம் பத்து - பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார், பாடப்பெற்றவர் - களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
  • ஐந்தாம் பத்து - பாடியவர் பரணர், பாடப்பெற்றவர் - கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
  • ஆறாம் பத்து - பாடியவர் காக்கைபாடினியார் (நச்செள்ளையார்), பாடப்பெற்றவர் - ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
  • ஏழாம் பத்து - பாடியவர் கபிலர்,பாடப்பெற்றவர் -    செல்வக் கடுங்கோ வாழியாதன்
  • எட்டாம் பத்து - பாடியவர் அரிசில், கிழார் - தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
  • ஒன்பதாம் பத்து - பாடியவர் பெருங்குன்றூர்க் கிழார்பாடப்பெற்றவர் - குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை  
  • பத்தாம் பத்து     
8. பரிபாடல்:
இதில் மொத்தமுள்ள பாடல்கள் 70, ஏனைய பாடல்கள் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை.

பரிபாடல் பின்வரும் பாடலின் துணைகொண்டு தொகுக்கப்பட்டுள்ளது:

    "
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
   
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
   
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
   
செய்யபரி பாடற் றிறம்"

  • திருமாலுக்கு - 8 பாடல் 
  • செவ்வேளுக்கு (முருகனுக்கு) - 31 பாடல்
  • காடுகாள் (காட்டில் இருக்கும் கொற்றவைக்கு) - 1 பாடல் 
  • படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு - 26 பாடல்
  • பெருநகரமாகிய மதுரைக்கு - 4 பாடல் 

0 comments:

Post a Comment