Followers

வறண்டு வரும் திபெத் பனி மலைகள்!

on Sunday, May 8, 2011


சீனாவின் மிகப் பெரிய நதியான யாங்சேவிற்கு நீர் ஆதாரமாக விளங்கும் திபெத்தின் பனி மலைகளின் பனிப்படலம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அதாவது கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 196 சதுர கிலோ மீட்டர் பகுதி பனியற்ற வறண்ட பகுதியாகியுள்ளது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

1971
ஆம் ஆண்டு சுமார் 1,247 சதுர கி.மீ. பரப்பளவை சூழ்ந்திருந்த யாங்சே நதி தற்போது 1,051 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாக குறைந்துள்ளது. அதாவது சுமார் பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) கன மீட்டர்கள் நீர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆய்வு குறித்த கண்டுபிடிப்புகளை சீன புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

பனி மலைகள் உருகுவதால் நதிகளிள் நீர் அதிகரிப்பது என்பது குறுகிய காலத்திற்கே நிகழும் என்று கூறும் ஆய்வாளர்கள், நீர் ஆதாரமான பனி மலைகளில் பனி வற்றி வருவதால் அது எதிர்காலத்தில் கடும் வறட்சி நிலைமையை உருவாக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.

யாங்சே, மெகாங், சிந்து உள்ளிட்ட மிகப்பெரிய நதிகள் திபெத்திலிருந்துதான் கடல் நோக்கி தங்கள் பயணத்தை துவக்குகின்றன. பனிச் சிகரங்களில் ஒரு முறை பனி வற்றத் துவங்கி விட்டது என்றால் மலைப் பகுதிகளின் சுற்றுச்சூழல் ஒழுங்கமைப்புகளை பாதுகாப்பது என்பது இயலாத செயலாகிவிடும் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தொழில் வளர்ச்சியில் உச்சம் பெற்ற நாடுகளும், வளரும் நாடுகளும் தங்களது கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால் இந்த நதிகள் செல்லும் நாடுகளில் கடுமையான வறட்சி ஏற்படும். மக்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு குடிபெயர வேண்டியதுதான் என்று இவர்கள் மேலும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

திபெத்தின் வடக்கு பகுதியான சாங் டாங் பகுதியில் பனிமலைகள் வேகமாக வறண்டு வருவது சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளிடையே கவனம் பெற்று வருகிறது.

பனிமலைகள் உருகுவதால் ஏற்படும் மிகப்பெரிய விளைவுகளில் மிகப்பெரிய ஏரிகள் உருவாகி சிறந்த விளை நிலப்பகுதிகள் பெருமளவு மூழ்கிவிடும் என்றும், அதே வேளையில் சிறிய பனி மலைகளில் பனி வறண்டு வருவதால் குடி நீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

0 comments:

Post a Comment