Followers

இன்சாட் (INSAT) என்றால் என்ன?

on Friday, June 17, 2011

விண்வெளி - இந்திய செயற்கைக்கோள்

செப்டம்பர், 2009

இன்சாட்(INSAT) என்பது இந்தியாவின் குறிப்பிட்ட வகைச் செயற்கைக் கோளைக் குறிக்கின்ற பொதுப் பெயராகும். டிவி ஒளிபரப்பு, ரேடியோ ஒலிபரப்பு, வானிலைத் தகவல் சேகரிப்பு, நிறுவனங்களிடையே தகவல் பரிமாற்றம் எனப் பல பணிகளுக்கு இன்சாட் வகைச் செயற்கைக் கோள்கள் உதவுகின்றன. மேற்கூறிய பணிகளுக்கென முதலாவது இன்சாட் செயற்கைக்கோள் 1982-ல் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக் கோளுக்கு INSAT 1-A என்று பெயர் வைக்கப்பட்டது. இன்சாட்-1 வரிசையில் முதலாவது என்பது பொருள்.
இன்சாட் எடுத்த புயலின் படம்.



இன்சாட்-1 வரிசையில் 1B, 1C, 1D என மேலும் மூன்று செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. பின்னர் இன்சாட்-2, இன்சாட்-3 மற்றும் இன்சாட்-4 வரிசைகளில் செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. இன்சாட் வகையில் மொத்தம் 21 செயற்கைக் கோள்கள்.
இன்சாட்-1 வரிசையிலான 4 செயற்கைக்கோள்களுமே இந்தியா அளித்த திட்டத்தின்படி அமெரிக்க நிறுவனம் தயாரித்தவை. இன்சாட்-2A தொடங்கி இந்த வகை செயற்கைக்கோள்களை நாமே தயாரிக்க ஆரம்பித்தோம்.
இன்சாட் வரிசையில் இன்சாட்-2DT என்ற செயற்கைக் கோளையும் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு கட்டத்தில் நம் தேவைக்குப் போதுமான இன்சாட் செயற்கைக்கோள்கள் விண்ணில் இல்லாத நிலையில், அவசர அடிப்படையில் Arabsat என்ற செயற்கைக் கோளை இந்தியா விலைக்கு வாங்கி அதற்கு இன்சாட்-2DT என்று பெயர் சூட்டியது. விண்ணில் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருந்த செயற்கைக்கோள் இப்படி விலைக்கு வாங்கிப் பயன்படுத்தப்பட்டது.
இன்சாட் வகை செயற்கைக்கோள்களில் பெரும்பாலானவை வெளி நாட்டிலிருந்து தான் விண்வெளியில் செலுத்தப்பட்டன.

1 comments:

Unknown said...

what is the full form of INSAT???

Post a Comment