Followers

சூரியன் எந்த வகையான நட்சத்திரம்?

on Friday, June 17, 2011


வானவியல் > சூரியன்

செப்டம்பர், 2009

சூரியன் தோன்றி 476 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனுடன் சேர்ந்து தோன்றியவை தான்.
ஆதியில் அண்டவெளியில் பிரம்மாண்டமான தூசு முகில் இருந்தது. அது ஒன்று திரள ஆரம்பித்துப் பிறகு வாயு திரளானது. ஈர்ப்பு சக்தி காரணமாக அது உருண்டையாகச் சுருங்க ஆரம்பித்தது. இதனால் ஏற்பட்ட அமுக்கத்தால் இந்த உருண்டையின் மையப் பகுதி மிகுந்த சூடேறியது. மேலும் மேலும் அமுக்கம் அதிகரித்தபோது வெப்பம் 10 மிலியன் டிகிரியாக உயர்ந்தது. இதன் விளைவாக அணுச் சேர்க்கை தொடங்கியது. இப்படியாக சூரியன் தோன்றியது. சூரியன் உருப்பெற ஆரம்பித்தபோது கிரகங்களும் தோன்றின.
சூரியன்: G2V வகை நட்சத்திரம்



சூரியன் அதன் ஆயுட்காலத்தில் இப்போது "நடுத்தர வயதை" எட்டியுள்ளது. சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதை நாம் அறிவோம். நட்சத்திரங்கள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சூரியன் G2V என்ற வகையைச் சேர்ந்தது. G2 என்பது சூரியனின் வெப்ப அளவைக் குறிக்கும்; V என்பது சூரியனில் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறும் அணுச் சேர்க்கையைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

0 comments:

Post a Comment