Followers

பொது அறிவு தகவல்கள்

on Tuesday, June 21, 2011

  • தமிழீழத்தில் அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் என்பவரே முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவராவர். 16.05.1667 – இல் தமது பதினெட்டாவது அகவையில் இதனை வெளியிட்டார்
  •  யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் அச்சடித்து வெளியான நூல்முத்தி வழிஎன்பதாகும். சேர்ச் மிஷனைச் சேர்ந்த யோசேப்பு நைற்று என்ற பாதிரியார் 1820 ஆம் ஆண்டையடுத்து இந்நூலை வெளியிட்டார்.
  • யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் கரணியங்களை ( காரணங்களை ) விளக்கமாக எழுதியவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள். அவ் ஊர்ப்பெயர் அகராதி யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆகும். அந் நூல் 1918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ளது
  • தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த சாகிப் எம். சீனிவாசராவ்
  • பெண்கள் மாத இதழாக வெளிவந்த முதல் இதழ்தமிழ் மகள்ஆகும். இது 1937 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் ஆசிரியராக திருவாட்டி மங்களம்மாள் மாசிலாமணி அவர்கள் இருந்தார்
  • அப்புக்காத்து ஐசாக் தம்பையாவின் மனைவியான மங்கள நாயகி என்பவரே முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளராவார். 1914 இல்நொறுக்குண்ட உதயம்என்றும் 1926 இல்அரியமலர்என்றும் இரு நாவல்களை எழுதியிருந்தார்.
  • தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம்கீதகவசம்’. 1913ஆம் ஆண்டு.    

1 comments:

E.S Rajeshwari said...

பயனுள்ள பொது அறிவு தகவல்கள்!!!

Post a Comment